கொரோனா பாதிப்பால் சீரியஸான நிலைமையில் பிரபல சீரியல் நடிகை!!

பாலிவுட் சீரியல்களில் பல ஹிட் தொடர்களில் நடித்தவர் நடிகை திவ்யா பட்நாகர்.

இவர் அண்மையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த தகவலை அவரே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

தற்போது அவரின் நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது, சுவாச குழாய் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாம்.

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டுள்ளனர்.

சீரியஸாக இருக்கும் நடிகை சீக்கிரம் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.