இந்த வாரம் எலிமினேஷனில் சிக்கியது இவர்தான்- இவருமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறியவர் சம்யுக்தா.

கண்ணீருடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவருக்கு குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

கேக் எல்லாம் வெட்டி குடும்பத்துடன் ஜாலியாக இருந்தார், அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் போட்டியாளர்கள் ஆரி, ஷிவானி, நிஷா என மாற்றி மாற்றி நாமினேட் செய்கின்றனர். ரம்யா பாண்டியன் பேசும்போது ஆரி மற்ற போட்டியாளர்களை பயப்பட வைக்கிறார் என்று கூறுகிறார்.

இதில் ஷிவானியை அதிகம் பேர் நாமினேட் செய்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்றே கூறலாம்.