ஆதிபுருஷ் படத்தில் ராமனாக பிரபாஸ்.. அப்போ சீதாவாக யார் நடிக்கிறார் தெரியுமா?

பாகுபலி படத்தை தொடர்ந்து, கதாநாயகன் பிரபாஸ், பாண்டஸி கதைக்களம் கொண்ட ஆதிபுருஷ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, சீதா கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அதில் நடிகை கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோன் என பல முன்னணி கதாநாயகிகளின் பேர்கள் அடிப்பட்டது.

இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ராமனுக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் கீர்த்தி சனன் நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.