பிக்பாஸ் ரம்யாவின் முகத்திரையை கிழித்த போட்டியாளர்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரம்யா பாண்டியன். டிவி நிகழ்ச்சிகளால் இவரை பலருக்கும் பிடித்து போனது. ரசிகர்களும் இவருக்கு இருக்கிறார்கள்.

அவரை ஏற்கனவே கமல் குழந்தைகள் டாக்டர் பீடியாட்ரிசியன் என கூறினார். அந்த பெயர் அவரின் நடத்தைகளுக்கு பொருந்தி போனது. சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஒரு கட்டத்தில் சவாலாக இருந்தது ரம்யா தான்.

சிரித்த முகமாகவே இருக்கும் ரம்யா மீது சிலருக்கு கடுப்பு இருக்கத்தான் செய்கிறது. டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பிருக்கிறது எனபலரும் சொல்வது ரம்யாவை தான்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரமோவில் என்னை நாமினேட் செய்ய காரணத்தை சொல்லுங்க என ரம்யா போனில் கேட்க அதற்கு ரமேஷ் சைலண்ட் கில்லர் நீங்க! சிரிச்சே ஊசி போடுறீங்க என கூறினார். இதனால் ரம்யா முகம் அப்படியே மாறியது.

அதே வேளையில் நிஷாவை நாமினேட் செய்வதற்கான காரணத்தை சொல்லுங்க என கேட்டு ரமேஷை சிக்க வைக்கிறார்.