இப்போது உள்ள ஆரி ஸ்மார்ட் தான், ஆனால் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க!!

தமிழில் நெடுஞ்சாலை என்ற படம் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகர் ஆரி.

அதன்பிறகு மாயா, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்கள் அவருக்கு சிறு அங்கீகாரத்தை கொடுத்தது.

அடுத்து பெரிய படங்கள் ஏதாவது நடிப்பார் என்று பார்த்தால் இயற்கை விதை விவசாயம் பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி மாஸாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ஆரி சிறு வயதில் அவரது அப்பாவுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.