அப்படி செய்ய வேண்டாம் என்று கூறிய தளபதி, ஆனால் கடைசியில்- மாஸ்டர் படப்பிடிப்பின் சுவாரஸ்ய தகவல்

பெரிய நடிகர்களின் படங்களை எடுத்து முடிப்பதற்குள் இப்போதெல்லாம் பல பிரச்சனைகள் வருகின்றன.

எப்படியோ கொரோனா பிரச்சனை வருவதற்குள் விஜய்யின் மாஸ்டர் பட படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ரிலீஸ் மட்டும் தான் தாமதமானது.

தற்போது படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இப்படத்தின் சில காட்சிகள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டது. முதலில் தயாரிப்பாளருக்கு செலவு வேண்டாம் என்ற நோக்கில் இங்கேயே செட் போட்டு எடுக்க முடியாதா என விஜய் கேட்டுள்ளார். ஆனால் தயாரிப்பு குழு அங்கே செல்ல எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியதால் விஜய் கர்நாடகா சென்றிருக்கிறார்.

தயாரிப்பு குழு விமானத்தில் செல்ல விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தளபதி அதெல்லாம் வேண்டாம் சாதாரண ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றிருக்கிறார்.

கடைசியில் தயாரிப்பு குழு அவரை கட்டாயப்படுத்தி விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

தயாரிப்பாளர்களின் நாயகனாக அவர் இருக்கிறார், 63 படங்கள் நடித்தும் அவர் இப்படி உள்ளது தான் அவரை உச்சத்தில் இருக்க வைத்துள்ளது என தயாரிப்பாளர் புகழ்ந்து பேசியுள்ளார்.