சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா…

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில், ஆரி மற்றும் பாலா இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது.

இதையடுத்து, இன்று வெளியான ப்ரோமோகளில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், போட்டியாளர்கள் கால் செய்து மற்ற போட்டியாளர்களிடம் அதிரடியாக பேசுகின்றனர்.

அந்த வகையில், தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சனம் கால் செய்தபோது, சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள். ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறியுள்ளார்.

அதற்கு சனமும் பதிலடி தரும் விதமாக உங்க mind-ல அந்த வார்த்தை இருக்குறதுனால தான் பேசுறீங்க என கூறியுள்ளார்.