கெட்டி மேளம் கொட்ட காதலியை திருமணம் செய்த பிரபல பாடலாசிரியர்!

சினிமா படங்களில் வெற்றிக்கு அதில் இடம் பெறும் பாடல்களும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும். ஒரு படத்தின் மீதான பார்வையை அப்படம் வெளியாகும் முன்பே வெளியிடப்படும் பாடல்களும் அதிகம் தூண்டுகின்றன.

படத்தை விளம்பரம் செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இசையமைத்தவர்கள், பாடகர்கள், பாடகிகளை கொண்டாடுவோரில் பலர் அப்பாடலை எழுதிய பாடலாசிரியரை கவனிப்பதில்லை என்பது வறுத்தமே.

அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது நலன் விரும்பிகளின் கருத்து.

தற்போது தெலுங்கு சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்த பாடலாசிரியர் ஸ்ரீமணி 10 வருடங்களாக தனக்கு தோழியாக இருந்த ஃபாரா ஐ திருமணம் செய்துள்ளார்.

கீதா கோவிந்தம், F2, மகரிஷி, நேனு லோக்கல் என பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.