தளபதி விஜய்யின் நடிப்பில் 30 வருடங்கள் கழித்து ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 65வது படத்தை நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழில் 30 வருடத்திற்கு முன் பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி நடிப்பில் வெளியான நடிகன் திரைப்படம் நடிகன்.

இப்படத்தை தற்போது பி. வாசு ரீமேக் செய்ய போகிறாராம். இந்நிலையில் நடிகன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தளபதி விஜய்யிடம் கேட்டுள்ளாராம் பி.வாசு.

தளபதி 65 படத்தின் இயக்குனர் இதுவரை முடிவு செய்யாத நிலையில், பி. வாசு தளபதி 65 படத்தை இயக்க சில வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்