சினிமா நடிகர்கள், நடிகைகள் அண்மைகாலத்தில் இறந்த செய்தி அடுத்தடுத்து தொடர்ந்து வெளியாகின. ஏற்கனவே பாலிவுட் சினிமா நடிகர் ரிஷி கபூர், இம்ரான் கான், சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை என பெரும் துயரத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த டிவி நடிகை லீனா ஆச்சார்யா உடல் நிலை பாதிப்பால் நேற்று முன் தினம் காலமானார். லீனா டிவி நிகழ்ச்சிகள், சீரியல், வெப் சீரிஸ் என பல விதங்களில் பணியாற்றிவர்.
கடந்த ஒருவருடமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு தன் தாயிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.
அந்த சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால் அவர் காலமாகிவிட்டார். இறப்பதற்கு முன் நடிகர் அபிஷேக் அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து நலம் விசாரித்துள்ளார். 30 வயதில் மரணத்தை தழுவியது பெரும் அதிர்ச்சியே.
View this post on Instagram