பெண்களுக்கு ஹார்மோனால் ஏற்படும் துன்பங்கள்.!

மனிதர்களின் உடலில் உள்ள சுரப்பிகளில், தனித்துவமான சுரக்கும் தன்மையை கொண்டது ஹார்மோன்கள் மட்டும் தான். உடலில் எண்ணற்ற அளவு ஹார்மோன்கள் சுரக்கிறது. ஹார்மோன்களின் சமிக்கைகளுக்கு ஏற்றாற்போல உடல் உறுப்புகள் செயல்பட்டு வருகிறது. உடலின் வளர்ச்சி, பருவகால மாற்றங்கள், உணர்ச்சிகள், நோயெதிர்ப்பு சக்தி, ஜீரண சக்தி, உடலின் சத்துக்களை சேமித்தல், தூக்கத்தை ஏற்படுத்துதல் என பல விஷயங்களில் ஹார்மோன்களால் ஏராளமான செயல்கள் நடைபெற்று வருகிறது.

ஆணிற்கும், பெண்ணிற்கும் ஹார்மோன் செயல்பாடுகள் ஒருசேர இருந்தாலும், இனப்பெருக்க விஷயங்களை பொறுத்த வரையில் ஆண் – பெண் ஹார்மோன்களின் மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆண்களுக்குள் ஆண் தன்மையை ஏற்படுத்துவதும், பெண்களுக்குள் பெண் தன்மையை ஏற்படுத்துவதும் இந்த ஹார்மோன்கள் தான்.

பெண்களுக்கு வருடத்தில் 365 நாட்களும் ஹார்மோன்கள் ஒரே மாதிரி சுரப்பதில்லை. சில நேரத்தில் ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் சீரற்ற தன்மை காரணமாக, பெண்களின் உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. டெஸ்டிரோஜன் ஆண்களுக்கான ஹார்மோன். பெண்களிடமும் சிறிதளவு டெஸ்டிரோஜன் இருக்கும்.

ஆண் மற்றும் பெண் என இருப்பாளரிடமும் பாலியல் ஆர்வத்தினை தூண்டுவது டெஸ்டிரோஜன் ஹார்மோன் தான். மூளையில் ஹர்மோன்களுக்கு மூலகாரணியாக ஹைப்போதலமஸ் என்ற அமைப்பு இருந்து வருகிறது. ஹைப்போதலமஸ் வேறு சில செயல்களுக்கும் உதவுகிறது.

நமது உடலின் வெப்பநிலை சமன் செய்தல், வேலை நேரத்திற்கு ஏற்றாற்போல தூக்கத்தினை ஏற்படுத்துதல் போன்ற செயல்களையும் செய்கிறது. கடுமையான மன அழுத்தம் ஏற்படும் பட்சத்தில், ஹைப்போதலமஸ் பணிகள் பாதிக்கப்பட்டு, பிற ஹார்மோன்களுக்கு உற்பத்திக்கான சமிக்கையை அளிக்க இயலாத சூழல் உருவாகும். பெண்கள் அதிகளவு மன அழுத்தத்தில் இருந்து வந்தால், அவர்களின் இனப்பெருக்க செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிவிடும். அதற்கு ஹைப்போதலமஸ் சுரக்காததே காரணம் ஆகும்.

பெண்கள் பூப்பெய்த காலத்தில் பி.எம்.எஸ் என்று அழைக்கப்படும் பிரீ மென்ஸ்டுரல் சிஸ்டம் Premenstrual syndrome (PMS) அவதியுறும். மாதவிலக்கு தொடங்கும் சில நாட்களுக்கு முன்னரும் இப்பதிப்பு ஏற்படும். கோபம், எரிச்சல், பதற்றம், மன அழுத்தம், கவலை போன்றவை இதன் அறிகுறியாகும். மாதவிடாய் சுழற்சியின் முதல் கால் பகுதி நாட்களில் ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகளவு ஏற்படும் என்பதால், சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்துடன் பெண்கள் இருப்பார்கள். நினைவாற்றலும் அதிகரித்து இருக்கும்.

மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் கால் பகுதி நாட்களில் மன அழுத்தம் ஆட்கொண்டு இருக்கும். இந்த நேரங்களில் புரோஜெஸ்டின் அதிகளவு சுரக்கும். இதுவே பி.எம்.எஸ் நெருக்கடிக்கு காரணமாக அமைகிறது. 40 விழுக்காடு பெண்கள் இப்பிரச்னைக்கு உள்ளாகின்றனர். பெண்கள் மாதவிடாய் சமயங்களில் இத்துனை கஷ்டப்படும் வேளையில், அவர்களின் கஷ்டத்தில் பங்கு எடுத்துக்கொள்ள இயலாது என்றாலும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதே உண்மையான அன்பு.