பட்டாசை பற்றவைத்து இளம்பெண் மீது போட்டு தகராறு செய்த இளசுகள்.. அரங்கேறிய கொடூர கொலை..

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அருக்காணி. இந்த தம்பதியின் மகள் மேகனா. இவர் நேற்று இரவு தனது கணவருடன், கொடுமுடியில் இருந்து தந்தை வீட்டிற்கு வந்த சமயத்தில், ஊரின் எல்லைப்பகுதியில் இளைஞர்கள் 7 பேர் மது அருந்திவிட்டு பட்டாசு வெடித்து கொண்டிருந்ததுள்ளனர்.

இதன்போது அவ்வழியாக வந்த தம்பதியின் மீது பட்டாசுகளை போட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த மேனகாவின் தந்தை ராமசாமி மற்றும் தாயார் அருக்காணி இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமசாமிக்கு ஆதரவாக அங்குள்ள காலனி பகுதியை சேர்ந்த சிலரும் இதில் தலையிட்டு மது அருந்தியிருந்த நபர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலையில் வெட்டு காயத்துடன் ராமசாமியும், அவரது மனைவியும் பிணமாக இருந்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நேற்று இரவு தகராறில் ஈடுபட்ட 7 இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.