இரண்டு சந்தேகநபர்களுக்கு கொரோனா உறுதி!

ஹினிதும பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஹினிதும பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி உட்பட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

ஹினிதும பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் உடுகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பூசா சிறையில் அடைத்தனர்.

அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என தற்போது அடையாளம் காணப்பட்டனர்.

இருப்பினும், பொலிஸ் நிலையம் இன்னும் மூடப்படவில்லை, மேலும் பொலிஸ் நிலையத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது