சானிடைசரில் விளையாடிய சிறுவர்கள்… இறுதியில் நேர்ந்த பரிதாப நிலை

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் சாந்தி நகரை சேர்ந்த பிரகாஷ், முகுந்தன் ஆகிய இரண்டு சிறுவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

சானிடைசரை கட்டைகள் மீது ஊற்றி தீக்குச்சி வைத்து விளையாடி கொண்டிருந்த போது, திடீரென சிறுவர்கள் மீது தீ பரவியது. அப்போது என்ன செய்வதென்று தெரியாமல், அருகில் இருந்த தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொண்டுள்ளனர்.

இதில் முமுந்தனுக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் தீ காயமும், பிரகாஷிற்கு இடது மார்பில் தீ காயமும் ஏற்பட்டது. அவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைகாக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சானிடைசர் வைத்து விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் தீ படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.