பைக் ரைடில் மாஸ் காட்டிய தல அஜித்.. !!

தமிழ் திரையுலகில் தனக்கென்று பல லட்சம் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தல அஜித்.

இவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் நடிப்பதில் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றிலும் அதிகமாக ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம்.

அந்த வகையில் நடிகர் அஜித் பைக்கிலேயே ஒடிசா வரை சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன..

தல அஜித் தற்போது கிடைத்திருக்கும் லாக் டவுன் லீவில் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து பைக்கிலேயே ஒடிசா வரை சென்று வந்திருக்கிறாராம்.