சீரியல், சினிமா நடிகைக்கு கத்தி குத்து!

சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. காதல் தோல்விகள், திருமண விவாகரத்து என எத்தனையோ சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகை மால்வி மல்ஹோத்ராவை கத்தியால் குத்தி தப்பியோடியுள்ளார் தயாரிப்பாளர் யோகேஷ் சிங்.

விசாரணையில் இவர்கள் கடந்த ஓராண்டாக நட்பில் இருந்து வந்துள்ளனர். ஆனால் நடிகை அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. இதனால் திருமணத்தை நிராகரிப்பதன் காரணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனிடையே அவர் மால்வியை கத்தியால் குத்து தப்பி ஓட உடனே மால்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.