விக்ரம் படத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரருக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த படக்குழு!!!

விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா படத்தில் வில்லனாக பிரபல கிரிகெட் வீரர் இர்ஃபான் கான் நடித்துவருகிறார். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் கோப்ரா படக்குழு இர்ஃபானுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு போஸ்டர வெளியிட்டுள்ளது. அதில் ஸ்டைலாக இர்ஃபான் நிற்பது போன்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இந்நிலையில், கோப்ரா படத்தில் வில்லனாக பிரபல கிரிகெட் வீரர் இர்ஃபான் கான் நடித்துவருகிறார். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் கோப்ரா படக்குழு இர்ஃபானுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு போஸ்டர வெளியிட்டுள்ளது. அதில் ஸ்டைலாக இர்ஃபான் நிற்பது போன்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் அஜய் ஞனமுத்து, உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி, இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைய என் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பராயன் பிறந்தநாள் தினத்தன்று,. அவருக்கு வாழ்த்து தெரிவித்த கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். கோப்ரா படத்தின் உங்கள் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் காண ஆர்வமாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.