ஸ்ரீலங்காவில் 06 மாதக் குழந்தையையும் விட்டுவைக்காத கொரோனா

இலங்கையில் 06 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா – ராகம பிரதேசத்தில் காய்ச்சல் காரணமாக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைக்கு பி.சி.ஆர் பரிசோதனை கடந்த 24ஆம் திகதி நடத்தப்பட்டது.

இதில் குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் குழந்தையின் பாட்டனார் கொழும்பு பேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்திருப்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.