முன்னணி நடிகர்கள் 4 பேரை கழட்டிவிட்ட நடிகை கேத்ரினா கைஃப்.!!

பாலிவுட் சினிமாவில் ஹாட் நடிகைக்கு பேர் போனவர் நடிகை கத்ரீனா கைஃப். 90களில் கொடிகட்டி பறந்ததை போன்று தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் கொடிகட்டி பறந்து கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தாலும் பல கிசுகிசுக்களில் மாட்டி கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அந்தவகையில் முன்னணி நடிகர்களையே தன் வலையில் சிக்கவைத்து பின் கழட்டி விட்டும் உள்ளார். ஆனால் இன்னும் யாரையும் திருமணம் செய்யாமல் இருக்கிறாராம்.

அதில் 4 முன்னணி பிரபலங்கள் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

சல்மான்கான் ஹிந்தி திரையுலகில் டாப் ஒன் நடிகர் ஆவார். கத்ரீனா கைஃப்- இன் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருவரும் டேட்டிங் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்து ரன்பீர் கபூருடன் கத்ரீனா காதலில் விழுந்ததால் சல்மான்கானுடன் இவருடைய உறவு முறிக்கப்பட்டது.

ரன்பீர் கபூர் பிரபலமான பாலிவுட் நடிகர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவருமே ஹாட் டாப்பிக்காக பல வருடங்கள் பாலிவுட்டில் வலம் வந்தனர். இவ்வாறு இருக்க ஒன்றாக வாழ்ந்த இருவரும் திடீரென பிரிந்து சென்றது பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கத்ரீனா மூன்றாவதாக டேட்டிங் செய்தவர் சித்தார்த் மல்லையா ஆவார். இந்த தகவல் ஆர்சிபி ஐபிஎல்மேட்ச் -ல் கேத்ரினாவை சித்தார்த்துடன் பார்த்தபோது உறுதி செய்யப்பட்டது.

விக்கி கௌஷல் தான் தற்போது கத்ரீனா கைப் உடன் கரண்ட் டேட்டிங் செய்து கொண்டிருக்கும் நபர் ஆவார். மேலும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கத்ரீனாவும் விக்கியும் ஒன்றாக காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.