உங்கள் கைகளை மென்மையாக அழகாக வைத்துக்கொள்ள என்ன பண்ணலாம் ??

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம்.

ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம்.

இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.

இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன.

கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் உறுப்புகளில் கிருமிகள், அழுக்குகள் படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகம், கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் வைரஸ் கிருமிகள் சுவாச அமைப்புக்குள் ஊடுருவி செல்ல வாய்ப்பிருக்கிறது.

கைகளை வாய்க்குள் வைக்கும்போது அதன் மூலம் எளிதாக வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும்.

அதனால் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது. அவை வைரஸ் கிருமிகளை செயலிழக்க செய்துவிடும்.

கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சானிடைசரை பயன்படுத்தலாம். ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு, கழிவறைக்கு சென்றுவந்த பின்பு, மண், தூசுகள் படிந்து கைகள் அழுக்கான பின்பு போன்ற சூழ் நிலைகளில் சானிடைசரை பயன்படுத்துவது சரியாக இருக்காது. அப்போது சோப்பை பயன்படுத்துவதுதான் நல்லது. கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பிறகுதான் சானிடைசரை பயன்படுத்தலாம்.

கைகளை பராமரிக்கும் முறை

  • முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள்.
  • ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள்.
  • இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும்.
  • பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள்.
  • கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள்.
  • இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும்.