காதலனை பற்றியும் திருமணம் பற்றியும் கூறும் நடிகை ராஷி கன்னா..!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடித்து வெளிவந்த இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா.

இதன்பின் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷுலின் அயோக்கிய, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

இதனை மேலும் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மணை படத்தின் 3ஆம் பாகத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை ராஷி கன்னாவிடன் தனது திருமணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நடிகை ராஷி கன்னா பதிலளித்துள்ளார்.

அவர் கூறியது :

 திரையுலகில் எத்தனையோ நடிகைகள் இருக்க, ஏன் என்னிடம் மட்டும் திருமணம், காதல் பற்றி கேட்ட்கிறீர்கள். நான் இதுவரை யாரும் காதலிக்கவில்லை. ஒருவேலை காதலித்தால், அவரை என் பெற்றோர் முன் நிறுத்தி, திருமத்திற்கு அனுமதி வாங்கிய பிறகு தான் மணப்பேன்  என கூறியுள்ளார்.