தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி..!!

இன்றைய ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 39 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 184 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,853 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.38,824 க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 184 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,096 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.40,768 ஆகவும் விற்பனை செய்யப்படது.

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4,680 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ..37,440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிலோ 400 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ பார் வெள்ளி 65,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.