இப்படி செய்தால் சர்க்கரை நோயே வராமல் தடுக்கலாம்.!

தேவையான பொருட்கள்: 

ஆவாரம் பூ – 100 கிராம்
கோரை கிழங்கு – 100 கிராம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
பருத்தி கொட்டை – 100 கிராம்
எள்ளு புண்ணாக்கு – 100 கிராம்

வற்றை தனி தனியாக காய வைத்து அரைத்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் மூடி வைக்கவேண்டும்.

காலை மற்றும் இரவில் தொடர்ந்து 48 நாட்களுக்கு அரை ஸ்பூன் வீதம் 100ml சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பாதியளவு சுண்டியதும் ஆற வைத்து குடித்து வர வேண்டும். இந்த கசாயத்தை குடிக்கும் பொழுது மது, மாமிசம் எடுத்து கொள்ளவே கூடாது. பாகற்காய் உணவில் சேர்க்கவும் கூடாது.

உச்சி முதல் பாதம் வரை முழுவதுமாக தாக்கக் கூடிய நோய் சர்க்கரை நோய் ஒன்று தான். உடலின் அனைத்து பகுதிகளும் இந்நோயால் பாதிப்படையும். அலட்சியம் காரணமாக பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகிறார்கள். 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்.

உணவு எடுத்து கொள்வதற்கு முன்னர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60 முதல் 110mg இருக்க வேண்டும். உணவு எடுத்து கொண்ட பின்னர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 140 க்குள் இருக்க வேண்டும். இவை கூடும் பட்சத்தில் சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

48 நாட்கள் இந்த மூலிகை கசாயத்தை தொடர்ந்து எடுத்து கொள்வதன் மூலம் சாகும் வரை சர்க்கரை வியாதியே வராது. அத்துடன் விட்டு விடாமல் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதும் அவசியமாகும்.

உணவு முறையை முடிந்த மட்டும் மாற்றி கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது நன்மைகளை தரும். நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியம் மேல் மிகுந்த அக்கறை தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நலமுடன் வாழுங்கள்.