தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக போகும் நபர்.?

சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம்.

அதற்கான முழு தகுதி உடைய கட்சி அதிமுக. மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். இருப்பினும் இது ஒரு அதிமுக தொண்டனாக என் கருத்து தவிர அதிகாரபூர்வமான தகவல் அல்ல எனக் கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஏப்ரல்m மேm ஜூன் 31,000 கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிமுக அரசு என்ன செய்துள்ளது என்பதை கூட பார்க்காமல் குறை கூறி வருகிறார்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஜிஎஸ்டி வரி தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் விரைவில் நலம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.