ஜலதோஷத்தை சரிசெய்ய மதுவை இப்படி குடிக்கலாமா?!

தற்போதைய வாழ்க்கை முறையில் பலர் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க அரசியல் தலைவர்களும், பெண்களும் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இருப்பினும் அரசாங்கமே இந்த மதுவை விற்பதும் காரணமாக அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

சிலர் மது உடன் மிளகுத்தூளை சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும் என கூறுகின்றனர். அதிலும், சிறிதும் தண்ணீர் கலக்காமல் ராவாக மதுவில் மிளகை போட்டு குடிக்க வேண்டும் என கூறுவார்கள். தயவுசெய்து இதனை யாரும் முயற்சிக்க வேண்டாம்.

தண்ணீர் கலக்காமல் மது அருந்தினால் விரைவில் உடல் பாகங்கள் பழுதடைந்து மரணம் ஏற்படும். அதில் தண்ணீரை சுத்தமாக கலக்காமல் மிளகுத் தூளை போட்டு குடித்தால் உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் அனைத்து பாகங்களுக்கும் ஆபத்து ஏற்படும்.

எனவே, ஜலதோஷம் பிடித்தால் இயற்கை வைத்தியமான துளசி, தூதுவளை உள்ளிட்ட பொருட்களை சாப்பிடலாம், அல்லது மருத்துவரை அணுகி இதனை சரிப்படுத்தலாம். இதற்கு மதுவை பயன்படுத்தி தேவையில்லாத பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.