சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் – பிரபல நடிகர்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இருப்பினும் அவரது பெயர் தமிழக அரசியலில் பேசு பொருளாக உள்ளது அதேசமயம் அவர் எப்போது விடுதலை ஆவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று திருச்சி தாராநல்லூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த   நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்துக் கடிசியில் ஆலோசித்து முடிவெடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.