கலக்கல் காட்டிய விராட் கோலி.. மாஸாக தெறித்த பந்துகள்..!!

ஐ.பி.எல் போட்டித்தொடர் கொரோனா காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் வார இறுதியின் சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் – ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணிக்கும் இடையே மாலை 3 மணியளவில் போட்டி துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை கையில் எடுத்த ஆர்.ஆர் அணியின் வீரர்கள் அடித்து ஆடுவது போன்று தோன்றினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும், 16 ஓவரின் துவக்கத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு, 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

இதனையயடுத்து தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில், தங்களின் ஆட்டத்தினை வெளிப்படுத்தும் பொருட்டு அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் விளையாடியும், ஆட்டத்தின் இறுதியில் விக்கெட் இழக்காமல் ஓரளவு ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக மஹிபால் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்களை குவித்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்பில் பெங்களூர் அணி ஆட்டத்தை துவக்கியது.

துவக்கத்தில் இருந்தே பெங்களூர் அணியினர் சிறப்பாக ஆடிய நிலையில், தேவ் படிக்கல் மற்றும் விராட் கோலியின் ஜோடி ரன்களை குவித்து வெற்றியை நிர்ணயம் செய்தது. தேவ் படிக்கல் 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்தார். விராட்கோலி 53 பந்துகளில் 72 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியின் முடிவில் 19.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி வெற்றிவாகை சூடியது.