11 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

இன்றைய இளைஞர்கள் காதல் எதற்கு எப்போது காதல் வரும் என்ற புரிதாலே இல்லாமல் அறியாத வயதில் செய்து பல விபரீதங்களைச் சந்தித்து வருகின்றனர். இது சமூகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உறைனர்களுக்கும் சங்கடத்தை உண்டாக்கிவடுகிறது.

சிவபுரி பட்டியில் வசித்து வந்த 11 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டர் இதில் அந்த ஊரில் வசித்து வந்த 16 வயது இளைஞரை அந்த மாணவி காதலித்து வந்ததாகவும், இதற்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அம்மாணவிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் வேதனையடைந்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகிறது. போலிஸார் மாணவனைத் தேடி வருகின்றனர்.