முக அழகை கெடுக்கும் கருவளையம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்??

செதுக்கி வைத்த சிற்பம் போல முகம்… வசீகரிக்கும் நிறம்… லட்சணமான சிரிப்பு… இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் இவை அனைத்தையும் காணாமல் போகச் செய்துவிடும். அதுதான் கண்களுக்கடியில் தோன்றுகிற கருவளையங்கள்.

இன்றைய நாட்களில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைதான் இந்த கருவளையம். குறிப்பாக பெண்களுக்கு இந்த கருவளையம் வந்துவிட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் செல்போன், கணினி அதிகம் பயன்படுத்துவதால் கண்கள் மிகவும் சோர்வடைந்து கண்ணுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது. குறிப்பாக தூக்கமின்மை, மனஅழுத்தம், ஆரோக்கியமான உணவு உண்ணாமல் இருப்பது என கூறலாம்.

தூக்கம்

சரியாக தூக்கம் இல்லாமல் போனாலும் கண்­களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்­தது எட்டு மணி நேர­மா­வது தூங்க வேண்டும்.

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்­திற்கு பின் கழு­வி­விட வேண்டும். தொடர்ந்து இது போல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்துவிட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும்.

புதினா இலை

புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

மஞ்சள்

மஞ்சளை எடுத்துகொண்ண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்த நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு நம் கண்களுக்கு மேல தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.

கருவளையல் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள்

ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா, கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் – இவை அத்தனையும் கருவளையங்களை விரட்டும் சக்தி கொண்டவை.