துண்டாடப்பட்ட கையினை பொருத்தி யாழ்.வைத்தியர்கள் சாதனை!

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

கிளிநொச்சி பகுதியிலிருந்து கடந்த 22ஆம் திகதி கை துண்டாடப்பட்ட நிலையில் 23ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபரிற்க்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திர சிகிச்சை மேற்கொண்டனர்.

இதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்கிய வைத்தியர் குழுவினரிற்கும் நன்றிகளையும் பாராட்டுகளை வழங்குவதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் கைகள், கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும்.

இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.