ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

டெல்லி அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்திருந்த நிலையில் அவர் தற்போது குணமாகி விட்டதால் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு பதிலாக அணியில் இருந்து அவெஷ்கான் நீக்கப்பட்டுள்ளார்

. டெல்லி அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது என்பதும், ஐதராபாத் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இதையடுத்து 11 வது லீக் போட்டியில்
விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் 2 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயா ஐயர் 7 ரன்கள் எடுத்தார். ஷிக்கர் தவான் – 34(31) ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார்.

இதையடுத்து 20 ஓவர்கள் முடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஐதாராபாத் அணி 15 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிபெற்றது. ஐதாராபாத் அணி
சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்,