காதலருடன் தனி விமானத்தில் வந்து இறங்கிய நடிகை நயன்தாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா, ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார், மேலும் இவரின் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலனான விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்று இருந்தனர்.

அதனை தொடர்ந்து விடுமுறை தினங்களை இவர்கள் இருவரும் கோவாவில் கொண்டாடி வந்துள்ளனர்.

மேலும் தற்போது இந்த காதல் ஜோடிகள் இருவரும் சென்னைக்கு தனி விமானம் ஒன்றில் வந்து இறங்கியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இதோ ஒரு சில புகைப்படங்கள்