வாடிவாசல் படத்தின் Script இதுதான்

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாவிற்கும் படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார்.

அசுரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.

சமீபத்தில் டுவிட்டர் லைவில் வந்த ஜி.வி.பிரகாஷிடம் ரசிகர்கள் பலரும் தங்களது கேள்விகளை முன் வைத்தனர். அதில் ஒருவர் வாடிவாசல் படத்தை பற்றி தகவல் கூறுங்கள் என கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ் ” வாடிவாசல் திரைப்படம் ஒரு கில்லர் Script என தெரிவித்துள்ளார். மிகுந்த ஆக்ஷன் காட்சிகள் உடைய படமும் வாடிவாசல். கண்டிப்பாக செம்ம படமாக இருக்கும் ” என கூறியுள்ளார்.