நிறுத்தப்பட்ட 2 சீரியல்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் எடுத்த அதிரடி- இனிமே இப்படியா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஓடும் சீரியல்கள் அனைத்தும் மெகா ஹிட் என்றே கூறலாம்.

அண்மையில் மௌன ராகம் சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது, அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது, எனவே அந்த சீரியல் ரசிகர்களுக்கு விரைவில் அடுத்த பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதற்கு நடுவில் தான் திடீரென ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது, ஏன் நிறுத்தினார்கள் என்பது தங்களுக்கே தெரியாது என அந்த சீரியல் நடிகை கூறியிருந்தார்.

இப்படி அடுத்தடுத்து இரண்டு சீரியல்கள் நிறுத்தப்பட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதாவது இனிமேல் அந்த சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இந்த தகவலை நடிகை சித்ரா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.