சாதனையை முறியடித்த பிக்பாஸ் சீசன் 4!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நிகழ்ச்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சூழ்ந்துவிட்டது. கமல் ஹாசன் மீண்டும் ஸ்டைலிஷாக களத்தில் இறங்குகிறார். புரமோவும் வந்தது.

இம்முறை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் வெர்சனுக்கு முன்பே தொடங்கிவிட்டது. நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் உற்சாகம் குறைந்து காணப்பட்டாலும் நிகழ்ச்சிக்குழு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதல் வாரத்தில் நடிகர் சூர்யா கிரண் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இரண்டு காமெடி நடிகர்களை களத்தில் இறக்கியது. இந்நிலையில் கடந்த சீசன்களை விட இந்த முறை TRP ல் 18.5 Points பெற்று சாதனை படைத்துள்ளதால் நிகழ்ச்சி தயாரிப்பு குழு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

இரண்டாம் வார எவிக்சனில் நடிகை கராத்தே கல்யாணி வெளியேற்றப்பட்டுள்ளார்.