அரசியலில் பிரகாசிக்கப்போவது யார்? பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 2021 ல் ஆட்சியை பிடிப்பது யார்? ரஜினி அரசியலுக்கு வருவாரா? கமல் கூட்டணி வைப்பாரா என பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையில் விஜய்யின் அரசியல், சூர்யாவின் அரசியல் என அடுத்த தலைமுறைகளின் முடிவு என்ன என பலருக்கும் கேள்வியாகவே இருக்கிறது.

நடிகைகள் சிலர் BJP உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் நடிகை நமீதா அண்மையில் இணைந்தார்.

இந்நிலையில் அவரிடம் பேட்டியில் ரஜினி, கமல், விஜய், சூர்யா ஆகிய 4 பேரில் அரசியலில் பிரகாசிக்கப்போகிறார்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு அவர் நான்கு பேருமே பலம் மிகுந்தவர்கள். ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் இரண்டு கண்கள் போல. விஜய் மூளை மாதிரி, சூர்யா இதயம் மாதிரி என குறிப்பிட்டுள்ளார்.