ஹூரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி!!

தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார்.

இதற்கிடையில் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என இருந்தாலும், அதை தாண்டி திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வந்தார்.

இந்நிலையில், தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துவிட்டு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு எடுத்த மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்டு டாப் ஹீரோக்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார்.

ஒரு காமெடி நடிகர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அப்படியே போகாமல் தொடர்ந்து முயற்சித்து முன்னேறி வருவதை கண்டு ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.