ரசிகர் மீது செம டென்ஷனாகி கத்திய லட்சுமி மேனன்..

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரே நடிகை என்றால் அது லட்சுமி மேனன் தான். சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமாகி மளமளவென முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். மற்ற நடிகைகள் பட வாய்ப்புகளுக்கு ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் சர்வசாதாரணமாக லட்சுமி மேனனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தன.

அதேநேரம் லட்சுமி மேனன் நடிக்கும் படங்களும் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வந்த நிலையில் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.  ஆனால் தன்னுடைய உடல் எடை கூடியதால் ரசிகர்களால் பெரிதும் கவரப்படாத லட்சுமிமேனன் தற்போது சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேநேரம் உடல் எடையையும் குறைத்து விட்டார். தற்போது மீண்டும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் லட்சுமி மேனனை ரசிகர் ஒருவர், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுங்கள், அதுதான் உங்களுக்கு அமைதியான வாழ்க்கையை தரும் என கூறியுள்ளார்.

நீ யார்ரா, என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றதுக்கு என்ற பாணியில் அந்த ரசிகரை வெளுத்து வாங்கிவிட்டார் லட்சுமி மேனன்.  ஏற்கனவே எப்படி மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடிப்பது என யோசனையில் இருக்கும் லட்சுமி மேனனிடம் தொக்காக வாங்கிக் கட்டிக்கொண்டார் அந்த ரசிகர்.