சூர்யாவின் உருவ படத்தை எரிக்க துணிந்த கும்பல்!

நடிகர் சூர்யாவுக்கு அண்மையில் அவர் நடித்திருக்கிற சூரரை போற்று படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியான போதே தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவியது.

இது ஒருபக்கம் இருக்க நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் படும் துயரங்களை தொடர்ந்து பதிவு செய்துவந்தார். நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக அவர் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழ நீதிபதிகளே சூர்யா மீது நடவடிக்கை ஏதும் தேவையில்லை என கூறினர.

இந்நிலையில் BJP கட்சியினர் சிலர் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தரக்குறைவாக பேச நடிகர் சூர்யா பெருந்தன்மையாக கருத்து தெரிவித்தது பலரையும் திகைக்கவைத்தது.

இதற்கிடையில் 75 பேர் கொண்ட கும்பல் சூர்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் இறங்க சிலர் சூர்யாவின் உருவ படத்தை எரிக்க முயன்றதாகவும் சொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்து சென்று போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.