கண்ணை கட்டிக் கொண்டு த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த இளைஞர்!

பிரபல நடிகை த்ரிஷாவின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் ஒரு இளைஞர்.

அதுவும் எப்படி தெரியுமா? கண்களை கட்டிக்கொண்டு.

ஆம், 52 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், 96 திரைப்படத்தின் பின்னணி இசையுடன், வெள்ளை போர்டில் போனாவால் த்ரிஷாவின் ஓவியத்தை தலைகீழாக வரைகிறார்.

இதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த த்ரிஷா, Love This Thank You So Much என குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே வைரலான இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.