மாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை!!

தமிழகத்தில் மாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு போலீஸ் சரகம் நெற்புகப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 35). இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 3½ மற்றும் 5½ வயதில் 2 மகள்கள் உண்டு.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான அய்யப்பன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கவிதாவின் தாயார் ரெங்கம்மாள் திடீரென மரணம் அடைந்தார்.

இதனால் அய்யப்பன் தனது மனைவிக்கு ஆதரவாக இருந்த அவரது தாயார் இறந்துவிட்டாரே என்று புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து சென்ற செட்டிநாடு பொலிஸ் நிலைய அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.