நடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்!!

ஆறு வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிய பல ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா.

அம்மா ஆறடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல அம்மாவின் நடிப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு வந்துவிட்டார் மீனாவின் மகள் நைனிகா.

ரஜினி அங்கிள் என சிறு வயது கதாபாத்திரமாக இருக்கட்டும், ரஜினி ஜோடியாக நடித்த கதாபாத்திரமாக இருக்கட்டும் எதிலுமே கச்சிதமாக பொருந்தக்கூடியவர் மீனா.

அந்த காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சரளமாக ஆறு மொழிகள் பேசக்கூடியவர் என்பதால் முன்னணி படங்களில் கதாநாயகிக்கு டப்பிங்கும் செய்துள்ளார்.

உதாரணமாக சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தில் கதாநாயகி பத்மபிரியாவிற்கு நடிகை மீனா தான் குரல் கொடுத்திருப்பார்.