விவாகரத்து ஆன நபரை திருமணம் செய்த தெய்வமகள் சீரியல் நடிகை…!!

தமிழகத்தில் கணவனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல நடிகையை பொலிசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஊரைச் சேர்ந்தவர் தேசிங்கு, இவர் தனது வீட்டை கடந்த சனிக்கிழமை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது வீட்டிலிருந்த 18 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தேசிங்கின் புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியபோது தேசிங்கின் மகன் மணிகண்டனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது நகை, பணத்தினை திருடியது தெரியவந்துள்ளது.

கார் ஒட்டுநரான இவர் திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பின்பு சென்னைக்கு சென்ற இவர், ரிவி சீரியல் நடிகர், நடிகைகளை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்லும் பணியை செய்து வந்துள்ளார்.

அப்போது தெய்வமகள் சீரியலில் அகிலா குமார் வேடத்தில் நடித்த சுசித்ரா என்கிற டிவி நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு இல்லாததால் செலவுக்கு பணமில்லாமல் கடுமையான கஷ்டத்தில் தவித்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊருக்கு சுசித்ராவை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் பீரோவில் நிறைய நகை மற்றும் பணம் இருப்பதை பார்த்ததும் அதனை எடுத்துச்சென்று விற்று அந்த பணத்தை கொண்டு தான் கதாநாயகியாக நடித்து குறும்படத்தை தயாரித்து, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து சம்பதித்து சொகுசாக வாழலாம் என்று கொள்ளையடிப்பதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.

சுசித்ராவை சென்னையில் விட்டு விட்டு தனியாக சொந்த ஊருக்கு சென்ற மணிகண்டன் தன் தந்தையும், தாயும் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்ற நேரத்தினைப் பயன்படுத்தி வீட்டில் கொள்ளையடித்துள்ளதாகவும், திருடிய நகை மற்றும் பணத்துடன் மனைவிக்காக காத்திருந்த நேரத்தில் பொலிசில் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

இந்த விடயத்தை அறிந்த சுசித்ரா தலைமறைவாகியுள்ளார், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நடிகை சுசித்ராவின் உண்மையான பெயர் பரமேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.