பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடம் அதிகம் பிரபலம். குடும்ப கதை எல்லோருடனம் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும்.

அண்மையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது, அது TRPயில் அதிக பார்வையாளர்களை பெற்றது என்றே கூறலாம்.

மீனா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இதனால் அவர் குழந்தை பிறந்த பின் சீரியல் பக்கம் வர மாட்டாரோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இதுகுறித்து மீனா, எல்லோரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். அப்படி அல்ல, சீக்கிரமே உங்கள் அனைவருக்கும் ஒரு பாசீட்டீவான செய்தி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதென்ன பாசீட்டீவான விஷயம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.