நடிகருடன் காதல் திருமணம்! போதை பொருள் கடத்தலில் சிக்கிய சம்பவம்!

போதை பொருள் கடத்தல் தடுப்பு, பயன்பாட்டிற்கு தடை என காவல் துறை அதிரடி காட்டி வருகிறது. ஆனால் சினிமாவில் அவை புழக்கத்தில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல சர்ச்சைகளை கிளப்ப சிலர் சிக்கியுள்ளனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள். கன்னட சினிமா உலகில் நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா இருவரும் சிக்கியது அண்மைகால தொடர் செய்தி.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரிதா ராயின் வீடியோ ஒன்று விசாரணை அதிகாரிகளிடத்தில் சிக்கியுள்ளது.

இதில் ஆண்ட்ரியா கடந்த வருடம் இலங்கை தலை நகர் கொழும்புவின் கேசினோவில் என் படம் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள கேசினோ அதிபர் சேக் பைசல் என்னை அழைத்திருக்கிறார். நன்றி என கூறியுள்ளார்.

கேசினோ சூதாட்ட கிளம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் அவர் நடிகர் டிக்காந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆண்ட்ரிதா கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி படங்களில் நடித்துள்ளார். 30 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட அவர் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.