50 வயதில் நள்ளிரவில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நடந்த கொண்டாட்டம்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நல்ல இடத்தினை பிடித்து நீலாம்பறியாக நிஜ வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் வாழ்ந்து வருகிறார்.

மேலும் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சில நடிகைகள் வயதான நிலையில் சினிமாவைவிட்டு விலகிவிடுவார்கள். ஆனால் தன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்தும் நடிப்பில் மிஞ்சியும் உள்ளதால் தற்போது வரை நடித்தும் பல படங்களில் கமிட்டாகியும் வருகிறார்.

லாக்டவுனை மீறியும் ஓடிடி தளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் குயின் வெற்றி நடைபோட்டும் நல்ல வரவேற்ப்பு பெற்றும் வருகிறது.

சினிமாவை தவிர்த்து வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர்கள் என்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் எல்லைமீறி 50 வயதான நிலையிலும் நடித்து வருகிறார்.

தற்போது 50வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பாராட்டுகளை கொடுத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Fifty and fabulous n what better than a FAMJAM to bring it on!!!! #familylove #birthday #thankyougod #blessed

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on