தேமலை நிரந்தரமாக போக்க வேண்டுமா?

தோல் சம்பந்தமான பல வியாதிகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் தேமல்.

இது முகம்,கழுத்து, கை போன்ற பல இடங்களில் வர வாய்ப்புள்ளது.

தேமல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அவர் உடலில் இருக்கும் செல்களில் “மெலனின்” குறைபாடு ஏற்படுவதால் இந்த தேமல் உண்டாகிறது.

இது ஆண்-பெண் என்று யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும் ஏற்படலாம்.

இது முக அழகையே பாழாக்கிவிடும். இதனை எளிய முறையில் தடுக்க ஒரு சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • முள்ளங்கியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி சிறிது மோரில் ஊறவைக்கவும். 1 மணீ நேரம் கழித்து இதை மைய அரைத்து தேமல் இருக்கும் இடங்கள் முழுக்க தடவி விட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
  • புடலங்காயை தலை மற்றும் வால் பகுதியில் நறுக்கி நடுவில் இருக்கும் சதைப்பகுதியை வெளியேற்றிவிடவும். இப்போது அதன் உள்ளே கற்றாழை ஜெல் மற்றும் கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஊறவிடவும். மறுநாள் காலை இதை எடுத்து தேமல் இருக்கும் பகுதியில் தடவ வேண்டும். உடல் முழுக்க தேமல் இருந்தாலும் இதை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • சுத்தமான தேங்காயெண்ணெய் ஒரு கப் எடுத்து, அதில் ஆடாதோடை இலை சேர்த்து ஊறவிடவும். வெயிலில் வைத்து எடுத்தால் இலையின் சத்து எண்ணெயில் இறங்கி இருக்கும். இதை தேமல் இருக்கும் இடத்தில் தடவி இலேசாக மசாஜ் செய்தது போல் தடவிவர வேண்டும். தினமும் இருவேளையும் இடை தடவிவந்தால் தேமல் மறையும்.
  • பூவரசு பட்டையை நறுக்கி தேங்காயெண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயையும் தடவி வரலாம். இந்த பூவரசம் பட்டையுடன் சிறிது வசம்பு சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தேமல் பகுதியில் தடவினால் தேமல் குணமாகும்.
  • தேமல் அதிகமாக உடல் முழுக்க இருந்தால் துளசி இலைகளுடன் சுக்கை வைத்து நசுக்கி தேமல் இருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும். தினமும் இரவு நேரங்களில் இந்த பற்று போட்டு வந்தால் தேமல் படிப்படியாக குறைந்துவிடும்.
  • ஆரஞ்சு பழத்தோல்களும் எலுமிச்சை பழத்தோல்களை காயவைத்து பொடித்து வைத்துகொள்ளுங்கள். இந்த பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குழைத்து தேமல் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் தேமல் இருக்கும் இடமே தெரியாமல் சரும நிறம் ஜொலிஜொலிக்கும்.