சென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லொறி… குழந்தையை பலிகொண்ட கோர விபத்து! சிசிடிவி காட்சி வெளியானது

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தாறுமாறாக சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்களின் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி ஏற்படுத்திய கோர விபத்தில் 4 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகமாக வந்த தண்ணீர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 வயது குழந்தை பிரணித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுமட்டுமன்றி மேலும் மூன்று பேர் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் அங்கிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் மோதியது. இதில் சிக்னல் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.


இந்த விபத்து காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி டிரைவரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பொலிசார் தேடி வருகின்றனர்.