பணத்தை பிரிப்பதில் தகராறு… வாலிபரின் உடலுக்கு தீவைத்த பெண்மணி..!!

சென்னையில் உள்ள அசோக் நகர் ராகவன் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர் ஒருவர் தீக்காயத்துடன் மயக்க நிலையில் இருப்பதாக, காவலாளி மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் துவங்கிய காவல்துறையினரிடம், வீட்டில் சமையல் செய்யும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரின் பெயர் தீபக் என்றும், இவர் டெல்லியை பூர்வீகமாக கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அவரது உடலில் அடித்து காயப்படுத்தியதற்கான ரத்தக் காயங்களும் இருந்த நிலையில், காவல்துறையினர் அவரது அறையை சோதனை செய்தனர். அவரது அறையில் இருந்த அலைபேசி மூலமாக இரண்டு பெண்களிடம் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மீனம்பாக்கம் பகுதியில் தற்போது தங்கியிருந்த பெண்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் டெல்லியை பூர்வீகமாக கொண்ட நிலையில், இருவரும் விபச்சாரம் செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

மேலும், மூவரும் டெல்லியை சார்ந்தவர்களாக இருந்த வந்த நிலையில், விபச்சார புரோக்கராக தீபக் செயல்பட்டு வந்துள்ளார். இவர்களுக்குள் பணம் பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், பெண்மணி அவரது உடலுக்கு தீவைத்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.