முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு!

உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான உணவுகளில் உருளைக்கிழங்கு ஒன்றாகும்.

உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக கருதப்படுகின்றது.

உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. இது ஒரு உடலுக்கு ஆரோக்கியமான ஒரு உணவாகும்.

ஆரோக்கியத்தில் மட்டுமின்றி முக அழகிலும் பெரிதும் உதவு புரிகின்றது.

அந்தவகையில் உருளைக்கிழங்கை வைத்து எப்படி முக அழகினைக் மெருகூட்ட முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு- 3
  • பால்- 2 ஸ்பூன்
  • ஓட்ஸ்- 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை

உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.